Categories
தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரி வன்புணர்வு வழக்கு – கேரள பாதிரியாருக்கு பிணை நீட்டிப்பு..!!

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பாதிரியார் பிராங்கோ முலக்கல்லுக்கு பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது சக கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி காவலர்கள் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பாலியல் வன்புணர்வு, வன்கொடுமை மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Image result for Bail extended to priest Franco Mulakkal in case of Kerala rape victim
இந்த வழக்கு கோட்டயம் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.பாதிரியார் பிராங்கோ முலக்கல் பிணை பெற்று, வெளியில் உள்ளார். இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிராங்கோ முலக்கல் ஆஜரானார்.தனது பிணையை நீட்டிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் வழக்குரைஞர் வாதாடினார்.

Image result for Bail extended to priest Franco Mulakkal in case of Kerala rape victim

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிராங்கோ முலக்கல்லின் பிணை மனுவை 2020ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கு, கேரள மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |