Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய அதிகாரி…. அடித்து உடைத்த கட்சியாளர்கள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சுங்கவாடியை அடித்து உடைத்ததால் வழக்கு செய்யப்பட்டு இருந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த 9 பேருக்கு பிடிவாரண்டு உத்தரவை நீதிபதி வழங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கவாடி முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் 20 வாகனங்களில் வந்துள்ளார். அப்போது சுங்கவாடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்துக் கொண்டு இருந்ததை பார்த்து காரிலிருந்து இறங்கி வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனை அடுத்து கட்சி தலைவர் உள்பட 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு  நகரச் செயலாளர் முரளி உள்பட 5 பேர் மட்டுமே ஆஜர் ஆகியுள்ளனர். ஆனால் மீதமிருக்கும் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் இருந்த கட்சி தலைவர் உள்பட 9 நபர்களுக்கு பிடிவாரண்டு வழங்கி நீதிபதி சண்முகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |