Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு …!!

சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி, ஏமாற்றி, பண மோசடி மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஆதாரங்கள் அழித்ததாக அவரது தந்தை தங்கபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,  கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் காசியின் தந்தை தங்கபாண்டி தனக்கு ஜாமீன் மனு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி குமரேசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சாட்சியங்களை  மிரட்டக்கூடாது, சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது,  விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து தங்க பாண்டியனுக்கு ஜாமின் வழங்கி உள்ளனர். மேலும் நிபந்தனை மீறும்பட்சத்தில் காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |