Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு…!!!

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது.

கன்னட உலகில் முக்கிய கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கிச்சா சுதீப், ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘பயில்வான்‘ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் ஒரு மல்யுத்த வீரர் தன் கனவுகளை நனவாக்க மேற்கொள்ளும் பயணத்தையும், சந்திக்கும் சவால்களையும் பற்றிய கதையாகும். மேலும் இப்படத்தில் அகான்ஷா கதாநாயகியாகவும், நடிகர் சுனில் ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Categories

Tech |