கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4.04 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதை விட சற்று குறைவாக 4.03 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை உள்நாட்டில் 2 சதவீதம் குறைந்து 2.29 லட்சமாக உள்ளது.
இந்த ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 2.34 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 4 சதவீதம் அதிகரித்து 3.51 லட்சமாக அதிகரித்துள்ளது. 3 சக்கர வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் குறைந்து 53,333-ஆக உள்ளது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் மொத்தம் 12.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனையை கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 2 சதவீதம் உயர்ந்துள்ளது.