Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் போட்ட பக்கா பிளான்” தூது புறாவாக சென்ற வைத்திலிங்கம்….. அடி மேல் அடி…. சறுக்கலில் எடப்பாடி….!!!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையே அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ‌ ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அவர்கள் பக்கம் இருக்கும் ஆதரவாளர்கள் கையெழுத்து போட்ட படிவங்களை அதாவது அதிமுக கட்சியை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என யார் பக்கம் அதிக அளவில் ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கு அதிமுக கட்சி என்று தேர்தல் ஆணையம் கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓபிஎஸ் புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது எடப்பாடிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ள நிலையில், சசிகலாவும் மற்றொரு பக்கம் தனக்கான ஆதரவாளர்களை திரட்டி வருவதாகவும் இபிஎஸ் ஆதரவாளர்களை தன்வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் தெற்கு மாவட்டத்தில் 12 மாவட்ட செயலாளர்களை தன்வசப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வைத்திலிங்கம் மூலம் தூது விட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், தங்களின் எண்ணம் நிறைவடைந்தால் திட்டத்தை விரிவு படுத்துவதற்கும் ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு பண்ருட்டி ராமச்சந்திரன் மூலமாகவும் ஆதரவாளர்களை திரட்ட ஓபிஎஸ் திட்ட மிட்டுள்ளதாகவும் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சசிகலாவும் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கும் ஆதரவாளர்களை தன்வசப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதால், சமீபத்தில் கேபி முனுசாமியை சந்தித்து பேசியுள்ளார். இப்படி பல்வேறு தரப்பிலிருந்தும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தாலும் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை நம் பக்கம் திரட்டலாம் என்று ஆதரவாளர்களுக்கு எடப்பாடி நம்பிக்கை கொடுப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |