பாகிஸ்தானில், பக்ரீத் பண்டிகைக்காக வளர்க்கப்பட்ட மாடு கிரேன் மூலமாக இறக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய பக்ரீத் திருநாள் வரவுள்ளது. இப்புனித நாளில் சிறப்பான தொழுகைகள் நடத்தப்படும். மேலும் இஸ்லாமியர்கள் அவர்களது வீடுகளில் ஒட்டகம், ஆடு மற்றும் மாடு ஆகியவற்றை சமைத்து சாப்பிடுவார்கள். அதன்படி பாகிஸ்தானின் கராச்சி மாநிலத்தில் பக்ரீத் பண்டிகைக்காக ஒரு வீட்டின் மாடியில் மாடு வளர்க்கப்பட்டு வந்தது.
இந்த மாட்டை கிரேன் மூலமாக கீழே இறக்குவதை மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இது தொடர்பில் மாட்டை வளர்த்த இஜாஸ் அகமது என்பவர் கூறுகையில், “இந்த மாடு கன்றுக்குட்டியாக இருந்த போது மொட்டை மாடிக்கு கொண்டு வந்தோம். தற்போது நன்றாக வளர்ந்தது. எனவே கீழே இறக்க முடியாததால், கிரேன் மூலமாக இறக்கினோம்” என்று கூறியுள்ளார்.