Categories
மாநில செய்திகள்

பாவா இங்கே….! பாட்ஷா எங்கே….! பரபரப்பை கிளப்பிய….. ரஜினிக்கு எதிரான போஸ்டர்….!!

தமிழகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்த்தை கலாய்த்து ஒட்டப்பட்ட போஸ்டர்   பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வீரன் ஆதம்பாவா நற்பணி இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதில் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக நான் ஓடோடி வருவேன் என்று கூறிய ரஜினிகாந்த் தற்போது வரை வராததாலும்,

எந்த ஒரு கண்டனத்தையும் பதிவு செய்யாததாலும் அவரை கலாய்த்து போஸ்டரில் சில வாசகங்களை எழுதி உள்ளனர். அதன்படி பாபா இங்கே! பாட்ஷா எங்கே! என்ற வாசகம் அதில் இடம் பெற்று உள்ளது. இதனை பார்த்த ஒரு சில ரஜினி ரசிகர்கள் போஸ்டரை கிழித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |