பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் கன்பெக்ஷன் அறையில் பாலாஜி கண்கலங்கி பேசியிருந்தார் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்கள் தங்களுக்கு கிடைத்த புகைப்படங்களில் இருக்கும் போட்டியாளர்களின் ஸ்டாட்டர்ஜி பற்றி கூற வேண்டும் . இதில் சோமுக்கு ஆஜித்தின் புகைப்படம் கிடைக்க ‘ஆஜித்துக்கு கேம் பிளான் இருக்குதா? என தெரியவில்லை’ என்கிறார் . இதையடுத்து ஆரிக்கு ரம்யாவின் புகைப்படம் கிடைக்க வழக்கம் போல சொல்ல வேண்டிய விசயத்தை விட்டு வேறு எதையோ கூறுகிறார்.
#BiggBossTamil இல் இன்று.. #Day91 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/MO8jV09zbh
— Vijay Television (@vijaytelevision) January 3, 2021
அப்போது இடைமறித்த கமல் ‘ஸ்டாட்டர்ஜி தாண்டி வேறு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறீர்கள்’ என்று ஆரியிடம் கூறுகிறார் . இதற்கு வழக்கமான தனது நக்கல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார் ரம்யா . இறுதியாக பாலாஜியின் கைகளில் ஆரியின் புகைப்படம் கிடைத்துள்ளது . பாலாஜி பேச ஆரம்பிப்பது போல் புரோமோ நிறைவடைந்துள்ளது . இதனால் பாலா ஆரியை பற்றி என்ன கூறியிருப்பார் என எதிர்பார்ப்பில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள் .