ஆக்கிரமிப்பு காஸ்மீரை அடுத்து பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதால் தீவிரவாதிகளின் சொர்க்கம் தகர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய பெரும் தாக்குதலில்தான் அதிகப்படியான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய மூன்று பகுதிகளில் சக்கோதி, முசாபராபாத் ஆகியவை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளன. மிக முக்கிய தீவிரவாத முகமான பாலக்கோட் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்காவா மாகாணத்தில
இந்த பகுதி ஜெய்ஷ்-இ-முகமது மட்டுமின்றி தாலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக 1978-ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை ஜியா உல் ஹக் பதவி வகித்த போது பாலக்கோட் மலை உச்சியில் அடர்ந்த வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி தங்கள் நடவடிக்கைகளை தொடங்கினர். ஜியா உல் ஹக் தீவிரவாதிகளுக்கு முழுமையான ஆதரவு அளித்ததால் அங்கு தீவிரவாதிகளின் பயிற்சி முகாம், பதுங்குகுழிகள், ஆயுதங்கள் குடோன்கள் அமைக்கப்பட்டன.
ஜியா உல் ஹக்கின் காலத்திற்குப் பிறகும் பாலகோட் பகுதியில் தீவிரவாதிகளின் மிக முக்கிய பகுதியாகவே இருந்து வந்தது. இந்த பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கும் எளிதாக செல்ல முடியும் என்பதால் இதனை தீவிரவாதிகள் முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனரும் அந்த அமைப்பின் மிக முக்கிய தலைவருமான மௌலானா யூசுப் அசார் கட்டுப்பாட்டில் இங்குள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புகள் முகாம் செயல்பட்டு வந்தது.
ஓசாமா பின்லேடன் தங்கியிருந்த அபுதாபாத் முகாமில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாலக்கோட் முகாம். இங்கு ஏராளமான தீவிரவாதிகள், மூத்த தளபதிகள், தற்கொலைப் படை வீரர்கள் என பலர் இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு நடந்த தாக்குதலில் சுமார் 300 வீரர்கள் தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலக்கோட் முகாம் தகர்க்கப்பட்டதன் மூலம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆப்கானிஸ்தானுக்கும் தலைவலி தரும் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.