Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

பாலி.விரிவுரையாளர் தேர்வு – 199 பேருக்கு வாழ்நாள் தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்திருக்கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு பாலிடெச்னிக் கல்லூரிகளில் இருக்கும் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது, முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதன் அடிப்படையில் பல தேர்வர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் கிட்டத்தட்ட 199 பேர் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது. தேர்வை எழுதிய பிறகு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அப்படி மதிப்பெண்கள் வித்தியாசம் இருந்த, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை என்பது தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்திருக்கிறது .

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடுகள் வெளிவந்த அந்த சமயத்தில் பாலிடெக்னிக் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தேர்வர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு அவர்களுக்கு தடை விதிப்பது குறித்த ஒரு ஆலோசனையை ஆசிரியர் தேர்வு வாரியத்துடன் மேற்கொண்டு இருந்தத நிலையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்ததை அடுத்து அந்த 199 பேருக்கும் வாழ்நாள் தடை என்பது விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக டிஆர்பி நடத்தக்கூடிய தேர்வு மட்டுமின்றி, அரசு நடத்தக் கூடிய தேர்வுகளிலும் அந்த 199 பேரும் பங்கு பெற முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |