சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 60 ரூபாயாக குறைந்துள்ளது
மழை வெள்ளம் ஆகியவற்றால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வெங்காயத்தின் வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்தது. இதனால் சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. பெரிய வெங்காயமும் கடந்த இரண்டு மாதங்களாக 100 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மகாராஷ்டிரா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.