Categories
உலக செய்திகள்

தடைவிதிக்கப்பட்ட கொண்டாட்டங்கள்…. வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகள்…. நடவடிக்கை எடுத்த பன்னிங் நகரம்….!!

பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களுக்கு சீன தென்மேற்கு நகரம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

சீனாவின் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து தென்மேற்கு நகரமான பன்னிங் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு புதிய விதிகளை வகுத்திருக்கிறது.

இதில் 200 யுவானுக்கு (ரூபாய் 2400) அதிகமான பணப் பரிசுகள் வழங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிகள் அனைத்துமே சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கிராம அமைப்பு தலைவர்களுக்கு மட்டுமே பொருந்தும், சாதாரண பொது மக்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீன விருந்துகளில் மங்கல விழாக்களில் ரொக்கப் பரிசுகளை வழங்குவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் செல்வாக்கு உள்ளவர்கள் பிறந்த நாளை கொண்டாடுகிறபோது திரளானோர் பங்கேற்பு இலட்சத்தை பரிசாக வழங்குவது புகார் எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |