Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் தடை உத்தரவு – எவற்றுக்கெல்லாம் தடை …!!

தமிழகத்தில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து, பள்ளி கல்லூரி உள்ளிட்ட அவற்றுக்கான தடைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு செயல்பாடுகளுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 இன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை தொடரும், எனினும் இணைய வழிக் கல்விக்கு தடை இல்லை.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள் கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமான போக்குவரத்து தடை நீடிக்கும் என்றும், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கு தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |