குதிரை பேரம் என்ற வார்த்தை வருவதற்கு காங்கிரஸ்தான் காரணம் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்து வந்த குமாரசாமி. அவரின் கீழ் செயல்பட்டு வந்த எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தின் விளைவாக குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து பாஜக கட்சிக்கு தாவிவிட்டனர். இதனால் குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது கர்நாடக மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்று அங்கே பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மிகுந்த மனவேதனையுடன் கருத்து ஒன்றை குமாரசாமி தற்போது தெரிவித்துள்ளார்.
அதில், ஆட்சியில் இருக்கும் கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு தாவுபவர்களும் சரி, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சரி, தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதன் மூலமாக ஜனநாயகம் காப்பாற்றப்படும். மேலும் குதிரை பேரத்தின் இன்னொரு பெயர் காங்கிரஸ். அரசியலில் குதிரை பேரம் என்ற வார்த்தையே காங்கிரசால் தான் வந்தது என்று குற்றம் சாட்டியுள்ளார்.