H1B விசாவுக்கான தடையை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலுக்கு முன் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த h1b விசா உள்ளிட்ட வேலைக்கான விசாகளுக்கு 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை தடை விதித்திருந்தார். இந்தத் தடை ஏற்கனவே, அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த இந்தியர்களுக்கும், அமெரிக்காவில் பணி செய்ய விரும்பி காத்திருக்கும் இந்தியர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.
இந்நிலையில் நேற்றுடன் முடிவடைந்த எச்1பி விசாவுக்கான தடையை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மீண்டும் உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப். இதன் மூலம் அமெரிக்காவில் பணிபுரிய ஆவலோடு உள்ள இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன