Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் உடனே தடை – அரசு திடீர் உத்தரவு …!!

கொரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்துள்ளது. இதிலிருந்து மீள மத்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகின்றது. குறிப்பாக சுயசார்பு இந்தியா என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்து இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படியே பல்வேறு திட்டங்களில் இந்திய தயாரிப்பையே பயன்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது, இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இராணுவ கேண்டீன்களுக்கு வெளிநாட்டு பொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்ய கூடாது. உள்நாட்டு தயாரிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |