Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆதிபுருஷ்” படத்துக்கு தடை….? பிரபாஸ் உட்பட படக்குழுவினருக்கு நோட்டீஸ்….‌ நீதிமன்றம் அதிரடி….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் ராமன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஓம் ராவத் இயக்க, சைப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு ஆளானது. அதாவது ராவணன் மற்றும் அனுமனின் வேடத்தை மிகவும் தவறான முறையில் சித்தரித்துள்ளதாக பலரும் கூறினர். அதோடு அயோத்தி கோவிலின் தலைமை குருவும் ஆதிபுருஷ் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதேபோன்று பாஜக கட்சியைச் சேர்ந்த மாளிகா அவினாஷ், இலங்கையைச் சேர்ந்த ராவணன் தீவிர சிவ பக்தராக இருக்கும்போது அவரை ஒரு சர்வாதிகாரி போன்று படத்தில் காட்டியுள்ளதாக குற்றம் சாட்டினார். இப்படி பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதிபுருஷ் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கண்டனங்கள் எழுந்ததால், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. மேலும் வழக்கில் பிரபாஸ் உட்பட பட குழுவினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Categories

Tech |