பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நேற்றைக்கு மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து அரசு இதழில் ( கெஜட்டில்) வெளியிட்டார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலமும் இதேபோன்று ஒரு அரசனை வெளியிட்டால்தான் அந்த மாநிலத்துக்கு இந்த சட்டம் என்பது பொருந்தும் என்ற அடிப்படையில், நேற்றைக்கு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
இதுல பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடைய துணை அமைப்புகளாக இருக்கக்கூடிய அணைத்து அமைப்புகளுக்கும் தடை என்பது இன்றிலிருந்து அமலுக்கு வந்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. தலைமைச் செயலாளர்கள் இறையன்பு இதை தெரிவித்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சகத்துடைய இந்த புதிய சட்டம் என்பது தடை சட்டம் என்பது தமிழகத்திலும் உடனடியாக வந்திருக்கிறது. இது அனைத்து கலெக்டர்களுக்கும், அனைத்து காவல் கண்காணிப்பாளருக்கும், டிஜேபி உள்ளிட்டவருக்கும் சுற்றரிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் செயல்பட முடியாத ஒரு சூழல் என்பது தமிழகத்திலும் ஏற்பட்டிருக்கிறது.