இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.மேலும் இதை உடனடியாக அமல்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Categories