மோடியின் வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்து அவர் பாகிஸ்தான் வான் வழியாக பறக்க அவருக்கு பாகிஸ்தான் தடைவிதிக்கபட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஒரு வார சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் புறப்பட்டுச் செல்கிறார். அவரது வெளிநாட்டு பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியே பயன்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு தங்கள் நாட்டு வான் வழியை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தானின் எந்த முடிவுக்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இது குறித்து பேசிய வெளியுறவு அமைச்சர் அதிகாரி பாகிஸ்தானின் செயல்பாடுகள் இருதரப்பு உறவில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றியதை பாகிஸ்தான் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தியாவுடன் வர்த்தகம் போக்குவரத்து உறவுகளை துண்டித்துக் கொண்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி களையும் வாபஸ் பெற்றது. இருநாடுகளுக்கு இடையே வந்த ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை நிறுத்தியதுடன், வான் வழித்தடங்கள் வழியாக பறக்க பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.