ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கு தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டாசால் ஏற்படும் நச்சு புகையில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், மக்களையும் காப்பாற்றும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வர இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பட்டாசு பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் காசு மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் கூட தீபாவளி பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுகிறது என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.