ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் பெரும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டோலோ செய்தி நிறுவனம் பெண்கள் தொண்டு நிறுவனம் சார்பில் செய்யப்படும் உதவிகளில் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிர்காக்கும் சேவை, தேவையான அடிப்படை உதவிகளுக்கு கூட கள உதவியாளர்களாக பெண்களை பயன்படுத்த கூடாது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பாளர் ஹீதர் பார் கூறியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மனிதநேய உதவிகளை கூட வழங்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தானில் 34 மாகாணங்களில் மூன்று மாகாணங்களில் மட்டுமே களப்பணியாளர்களாக பெண்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.