வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் 67 ரன்கள் குவித்தார்.இதன்பிறகு களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கத்திலேயே விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால் 45 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்து வங்காளதேச அணி தடுமாறியது.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த அஃபிஃப் ஹொசைன் – மெஹிதி ஹசன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினர்.இறுதியாக 48.5 ஓவரில் இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஃபிஃப் ஹொசைன் 93 ரன்னும் , மெஹிதி ஹசன் 81 ரன்னும் குவித்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபசல்ஹக் ஃபாரூக்கி 4 விக்கெட் கைப்பற்றினார்.