கோவையில் வாழைபயிரிட்ட விவசாயிகள் நஷ்டஈடு வழங்குமாறு தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்கு ஊடுபயிராக வாழை மரங்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யப்படும். விதைக்கப்ட்ட வாழை கன்று ஓராண்டுக்குள் நல்ல விலை கொடுத்து விவசாயிகளுக்கு நல்ல வருமானம் ஈட்டி தரும். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எந்த வருடமும் இல்லாத அளவிற்கு வாழை நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை. பொள்ளாச்சி மார்க்கெட், கேரள பகுதிகளில் நல்ல விலைக்கு போகும். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஊரடங்கிற்கு முன் ஒரு வாழைத்தார் ரூ240க்கு விற்பனை செய்யப்படும்.
ஆனால் தற்போது விலை வீழ்ச்சியால் ரூபாய்40க்கு மட்டுமே விற்பனை ஆவதாகவும் தெரிவித்தனர். அதேபோல் கற்பூரவள்ளி, செவ்வாழை உள்ளிட்டவை கிலோ 30 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோ ரூபாய் 10க்கு மட்டுமே விற்பனையாவதாகவும் இதனால் ஏக்கருக்கு 50 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், இதற்கு தமிழக அரசு மனசாட்சியுடன் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.