வாழைப் பழத்தால் ஏற்படும் நன்மைகள்
- கண் எரிச்சல் நீங்குவதற்கு வெள்ளரிக்காய், வாழைப்பழம், தக்காளி, உருளைக்கிழங்கு இவற்றை வட்டவடிவில் ஸ்லைஸ் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நிமிடங்கள் மூடிய கண்களின் மேல் வைத்து எடுத்தால் கண் எரிச்சல் நீங்கும். கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்கள் கண் வறட்சி அடையாமல் தடுக்கவும் கண் எரிச்சலை நீங்கவும் இதனை பயன்படுத்தலாம்.
- உடல் இளைத்தவர்களுக்கும், பிரசவமான பெண்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க் போக்க வாழைப்பழத்துடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்து அந்த தழும்புகளின் மேல் போட்டு வந்தால் விரைவில் தழும்புகள் மறைந்துவிடும்.
- பாதத்தை பட்டுப் போன்று வைத்துக் கொள்ள வாழைப்பழத்துடன் உருளைக்கிழங்கு சாறு சேர்த்து பாதத்திற்கு பேக் போட்டால் பாதத்தில் ஏற்படும் வெடிப்பு, சுர சுரப்பு போன்றவை அகன்று பட்டுப்போன்ற பாதங்கள் கிடைக்கும்.
- அலர்ஜி ஏற்பட்டால் வாழைப்பழத்துடன் சப்போட்டா பழத்தையும் சேர்த்து அரைத்து உடன் பால் ஊற்றி நன்கு கலந்து அலர்ஜி ஏற்பட்ட இடத்தில் போட்டு காயவிட்டு கழுவினாள் சரும அலர்ஜி நீங்கும்.