பனங்கிழங்கில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
மருத்துவ குணம் நிறைந்த பனங்கிழங்கு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள்தான் பனங்கிழங்கு
பனங்கிழங்கில், நிறைய சத்துக்கள் உள்ளன. அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் தணியும்.
பனங்கிழங்கில், அதிக நார்ச்சத்து உள்ளதால் அதனை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் தீரும். இரும்புச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் உடலில், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும்.
பெண்களுக்கு ஏற்படும் கற்பகால பிரச்சினைகளுக்கு பனங்கிழங்கு சிறந்த ஒரு தீர்வு. வாயு பிரச்சனை, பித்தம், கபம், சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் பனங்கிழங்கு சிறந்த தீர்வாகும்.