வாழைப்பூ-65
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ – 1
மிளகாய்த்தூள் – 5 டீஸ்பூன்
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் – 7 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் , அரிசி மாவு , கார்ன்ஃப்ளார் , இஞ்சி-பூண்டு விழுது , கரம் மசாலாத்தூள், தயிர் , உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கிளறி ஊற விட வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் வாழைப்பூவை நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால் வாழைப்பூ-65 தயார் !!!