வாழைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் – 2
தனியா – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 8
கடலைப்பருப்பு – 4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி
கடுகு – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – தேவையானஅளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ஒரு கடாயில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . பின்னர் வாழைக்காயை நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த வாழைக்காயை சேர்த்து வதக்கி , கடலைப்பருப்பு பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வாழைக்காய் பொரியல் ரெடி!!!