வாழைபழத்தில் உள்ள வகைகள் மற்றும் சத்துக்களினால் ஏற்படும் குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக வாழைப்பழம் இருந்தாலும், உலகஅளவில் உள்ள மக்களால் தினமும் விரும்பி சாப்பிடும் முதல் பழம் வாழைப்பழம் ஆகும். வாழைப்பழம் எல்லா இடத்திலும் பொதுவாக கிடைப்பதால், அதன் விலை குறைந்து காணப்படுவதால், அதை யாரும் வாங்கி சாப்பிடுவது கூட கிடையாது. ஆனால் வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் மற்றும் பலன்கள் அதிகம் நிறைந்துள்ளது .
வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்:
வாழைப்பழத்தில் இருக்கின்ற நீர்ச்சத்து , சர்க்கரை, புரதம், தாதுப்பொருகள், கால்சியம், இரும்பு சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் B, வைட்டமின் A, வைட்டமின்B 1 போன்ற கலோரி நிறைந்துள்ளதால், இது உடம்பிற்கு தேவையான சத்துக்களை தருவதுடன், கொலஸ்ராளையும் குறைக்க உதவுகிறது.
முக்கனிகளில் ஒன்றாக இருப்பது வாழைப்பழம் ஆகும். பல்வேறு வகையான வாழைப்பழங்கள் கிடைக்கின்றன. அவற்றிலும் மருத்துவ குணங்கள் இருக்கிறது. அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய பழமாக இது திகழ்கிறது.
வாழை பழத்தின் வகைகள் :
வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது.
சத்துக்கள்
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும். இருப்பினும் தனித்தனியே ஒவ்வோர் வாழைப்பழத்தின் சிறப்பு அம்சத்தையும், பலன்களையும் பார்க்கலாம்.
செவ்வாழை பழம்:
செவ்வாழை பழத்தில் அதிக தாது சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பழத்தில் அதிக அளவு பீட்டா கரோட்டீன், வைட்டமின்-சி, பொட்டாசியம், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது சிறுநீரகத்தில் கற்கள் வளருவதை தடுத்தல், மலச்சிக்கல், சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு தீர்வாக உள்ளது. இந்த பழத்தில் தொற்றினால் பரவும் நோய் கிருமிகளை விரட்டும் ஆற்றலை கொண்டுள்ளது. செவ்வாழை பழத்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிப்பு இருந்தால் இது ஒரு சிறந்த மருந்தாக உதவுகிறது.
ரஸ்தாளி:
பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி – 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் சோர்வு நீங்கும். தினமும் இரவு 1 ரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை சரியாகும். அத்தோடு மன அழுத்தமும் குறையும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
கற்பூரவள்ளி:
கற்பூரவள்ளி வாழைப்பழத்தில், அதிக அளவு செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஜீரன சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் சூட்டைத் தணிக்க பெரும் உதவியாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க சிறந்தது. இது நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு நரபினை வலு சேர்க்க உதவுகிறது.
பச்சைப்பழம்:
இந்த பச்சை வாழைபழத்தில் அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்றவை நிறைத்துள்ளதால், இது இதயத்துக்கு வலு சேர்க்கிறது. மேலும் இது குடல் புண்களை குணப்படுத்துகிறது. பொதுவாக, எல்லோரும் பச்சைப்பழத்தை உண்ணலாம். மேலும், உடல் எடையை குறைக்கச் செய்கிறது. உடல் குளிர்ச்சியை தருவதோடு, பித்த நோயை குணபடுத்தும்.
யார் யார் சாப்பிட கூடாது?
இந்த வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் அதிகஅளவு சாப்பிடக் கூடாது. வெறும் வெயிற்றில் காலையில் வாழைப்பழம் உட்கொண்டால் அசிடிட்டி ஏற்படும். அதனால் மதியம் அல்லது இரவு நேரங்களில், வாழைப்பழத்தை சாப்பிட எடுத்துக் கொள்ளலாம்.