சேலம் மாவட்டத்தில் பேருந்து நிறுத்தத்தில் வாழைப்பழ தாரை தொங்க விட்டு ஏழைகளுக்கு உதவிய சமூக ஆர்வலரின் சேவையை பொது மக்கள் பாராட்டியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் அதிகாலை நேரத்தில் வாழைப்பழ தார் ஒன்றை தொங்க விட்டு சென்றுள்ளார்.
அந்த வாழைப்பழங்களை அப்பகுதியில் செல்லும் ஏழைகள் மற்றும் சாலை ஓரத்தில் சுற்றுபவர்கள் பழத்தை பறித்து சாப்பிட்டு விட்டு பசியை போக்கி கொள்கிறார்கள். இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகாலை நேரத்தில் வாழை பழத்தாரை கொண்டு வந்து கட்டி விட்டுச் சென்ற அந்த மனிதரின் சேவையை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.