சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரம் வாழைகள் நாசம் ஆகிவிட்டன.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாரிமுத்து என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தோணுகால் பகுதியில் இரண்டு ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணத்தால் மாரிமுத்து தனது நிலத்தில் பயிரிட்டு இருந்த சுமார் 1300 வாழைகள் நாசம் ஆகிவிட்டன.
இதில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள 1000 வாழைகள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. இதுகுறித்து மாரிமுத்து கூறும்போது, கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட வாழைகள் சாய்ந்தது வேதனை அளிப்பதாகவும், தமிழக அரசு இதற்கான உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.