Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மொத்தம் 50 லட்ச ரூபாய்… மழையினால் ஏற்பட்ட சேதம்… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

50 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் கனமழையினால் சேதம் அடைந்து விட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சகாதேவன் பேட்டை, சுந்தரி பாளையம், கோழியனூர், பஞ்சமாதேவி, பூவரசங்குப்பம் போன்ற பகுதிகளில் ஏராளமான வாழை மரங்கள் பயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கன மழையினால் அங்கு சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்து விட்டது.

மேலும் அதில் இருந்த குலைகள் நன்றாக விளைந்து வந்த சமயத்தில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இவ்வாறு முறிந்து விழுந்த வாழை மரங்களால் விவசாயிகளுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |