Categories
தேனி மாவட்ட செய்திகள்

பலத்த காற்றால் வாழைகள் நாசம்…பல லட்சம் இழப்பு… விவசாயிகள் வேதனை…!!

பெரியகுளம் பகுதியில் பலத்த காற்றால்  வாழைகள் சாய்ந்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைத்துள்ளனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் சந்திராபுரம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் சாய்ந்து சேதமானது.இதையடுத்து காற்றில் சாய்ந்து நாசமான வாழைகளை தோட்ட கலையாளர்கள் மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர்.

அப்போது அதிகாரிகளிடம்  வங்கியில் கடன் வாங்கி  சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் அனைத்தும் நாசமானதால் அரசு சார்பில் உரிய  இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .விவசாயிகள் கோரிக்கை குறித்து பரிசோதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |