தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ,ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பால் டேம்பரிங் விவகாரம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் , ஆஸ்திரேலிய வீரரான பான்கிராப்ட் போட்டியின்போது உபயோகப்படுத்திய பந்தை, உப்புத்தாள் பயன்படுத்தி சேதப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தத் தொடரில் கேப்டனாக இருந்த ஸ்மித் மற்றும் துணைக் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகியோருக்கு இதுபற்றி தெரிந்து உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதனால் வீரர்கள் பான்கிராப்டுக்கு 9 மாத தடையும், டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித்துக்கு தலா ஓராண்டு வரை தடையும் விதிக்கப்பட்டது.
அதோடு இதுபற்றி வீரர்கள் ஏதேனும் புது தகவலை தெரிவித்தால், அந்த தகவலின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது பான்கிராப்டு, பால் டேம்பரிங் விவகாரத்தில் அணியில், அப்போது போட்டியில் இடம் பெற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தெரியும் என்று தெரிவித்திருந்தார். இதனால் இது தொடர்பாக புதிதாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதால், மீண்டும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த விவகாரத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.