புதுச்சேரியில் தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த கோரிக்கையை சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தான், எங்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் செயல்பட முடியும் என்று தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமியின் கருத்து புதுச்சேரியில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வகையிலே முதல்வருடைய இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தந்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான அதிமுகவும் இதற்கு ஆதரவளித்திருக்கின்றது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு தர வேண்டும் என்று தெரிவிக்கின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய nr காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை ஒருமித்த கருத்தாக இருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை இது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
எனவே இதுகுறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக தெரிவித்துள்ளது. மேலும் பாஜக கட்சியினுடைய நிலைப்பாடு என்ன ? என்பதை விளக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. இந்த விகாரம் எதிர்க்கட்சி தரப்பிலும் தற்போது விஸ்வரூபம் எடுத்து இருக்கின்றது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு தர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி பந்த் ( முழு அடைப்பு ) போராட்டத்திற்கு அதிமுக அழைப்பு விடுத்திருக்கின்றது.