Categories
தேசிய செய்திகள்

“கலவரத்தை விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்” மேற்கு வங்கத்தில் பிரச்சாரம்…. மம்தா பானர்ஜியின் அதிரடிப் பேச்சு….!!

பாஜக மேற்கு வங்கத்தை சீர்குலைக்க இருக்கிறது என மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி இருப்பதால் இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்சமயம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல முக்கிய தலைவர்கள் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் நீங்கி பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் 19 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற போது மம்தா பானர்ஜி கூறியதாவது “கட்சியில் இருந்து இன்னும் எத்தனை பேர் வேண்டுமானாலும் போகட்டும் அதனை பற்றி நான் கவலை கொள்ள மாட்டேன். நான் தனியாக இல்லை. எனக்கு மக்களுடைய ஆதரவு இருக்கின்றது. பாஜக மேற்கு வங்கத்தை சீர்குலைக்க நினைக்கிறது. ஆனால் நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை மேற்குவங்கத்தில் அனுமதிக்க மாட்டேன். பாஜக கலவரங்களை விரும்புகிறவர்கள். அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மேலும் மாநிலத்தில் கலவரத்தை ஊக்குவிக்க விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என்று அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |