பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்துள்ளது.
ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியில் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி 9 ரன்கள் எடுத்த நிலையில் தீபக் சாஹர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிபட்டார்.
இதையடுத்து வந்த டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 28 (19) ரன்களும், அக்ஷ்தீப் நாத் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் பார்த்திவ் பட்டேல் அரைசதம் கடந்து 53 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு மார்கஸ் ஸ்டோய்னிஸ் 14, பவான் நெகி 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இறுதியில் மொயின் அலி அதிரடியாக விளையாடி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது.சென்னை அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதையடுத்து 162 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியுள்ளது.