Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் விராட் கோலி அவுட்….. பெங்களூர் அணி 15 ஓவர் முடிவில் 127/3…..!!

பெங்களூர் அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் குவித்துள்ளது.    

ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 (33) ரன்களும் சூரியகுமார் யாதவ் 38 (24) ரன்களும், ஹர்திக் பாண்டியா 32 (14) ரன்களும், யுவராஜ் சிங் 23 (12) ரன்களும்,  டிகாக் 23 ரன்களும் குவித்தனர்.

Seithi Solai

 

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான மொயின் அலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில் மொயின் அலி 13 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதன் பின் விராட் கோலி களமிறங்கி பார்திவ் பட்டேலுடன் இணைந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் பார்த்திவ் பட்டேல் 31 ரன்களில் மார்க்கண்டே பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும்  சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 (32) ரன்களில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது ஹெட் மேயர் களமிறங்கி டிவில்லியர்ஸுடன் விளையாடி வருகிறார். டிவில்லியர்ஸ்  33* (27) ஹெட் மேயர் 2 *ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

 

Categories

Tech |