ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் தோல்வியால் பெங்களூரு அணி 6வது இடத்தை பிடித்துள்ளது.
12வது ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 67 (41), ஸ்டோய்னிஸ் 31* (28), ரன்களும் குவித்தனர். விராட் கோலி 23 (25), ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், கேப்டன் அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன் பின் ரஹானே 22 ரன்களும், ஜாஸ் பட்லர் 59 (43) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அதன் பின் ராகுல் த்ரிப்பாதியும் , ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் 38 (31) ரன்களில் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட ராகுல் த்ரிப்பாதி 19.5 வது பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை வசமாக்கினார்.
ராகுல் த்ரிப்பாதி 34* (23), ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை ருசித்தது. இதனால் பெங்களூரு அணி தொடர்ந்து 4 முறை தோல்வியை சந்தித்த அணியாக 6 வது இடம் பிடித்துள்ளது.
இதுவரை தொடர் தோல்விகள் அடைந்த அணிகளின் பட்டியல்
2013 – டெல்லி அணி தொடர்ந்து 6 முறை தோற்றுள்ளது.
2012 – ஹைதராபாத் அணி தொடர்ந்து 5 முறை தோற்றுள்ளது.
2014 – மும்பை அணி தொடர்ந்து 5 முறை தோற்றுள்ளது.
2008 – மும்பை அணி தொடர்ந்து 4 முறை தோற்றுள்ளது.
2015 – மும்பை அணி தொடர்ந்து 4 முறை தோற்றுள்ளது.
2013 – பெங்களூரு அணி தொடர்ந்து 4 முறை தோற்றுள்ளது.