வங்கதேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனா, ராஜஸ்தான் மாநில விமான நிலையத்தில் தனக்கு வரவேற்பு அளித்த கலைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடியிருக்கிறார்.
இந்திய நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுபயணமாக வந்திருக்கும், வங்கதேச பிரதமரை, கடந்த செவ்வாய் கிழமை அன்று அதிபர் மாளிகையில் சிறப்பாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து டெல்லியில் ராஜ்காட்டில் இருக்கும் காந்தியடிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
#WATCH | Rajasthan: Upon her arrival at Jaipur airport earlier today, Bangladesh PM Sheikh Hasina grooved with the local artists who had gathered there to welcome her. pic.twitter.com/Mk8qf5xDEG
— ANI (@ANI) September 8, 2022
அதன் பிறகு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் அஜ்மீர் நகர ஷெரிப் தர்காவிற்கு சென்றிருக்கிறார். அவரை வரவேற்க ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கலைஞர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் நடனமாடி பிரதமரை வரவேற்றனர். அவர்களுடன் சேர்ந்து பிரதமரும் நடனமாடி, புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.