Categories
உலக செய்திகள்

ரோஹிங்கியா அகதிகள் நாடு திரும்ப வேண்டும்… ஐ.நாவை வலியுறுத்தும் வங்கதேசம்…!!!

வங்கதேச பிரதமரான ஷேக் ஹசீனா, ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டிற்கு மீண்டும் செல்ல ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மியான்மர் நாட்டில் கடந்த 2017 ஆம் வருடத்தில் ரோஹிங்கியா மக்களை எதிர்த்து ராணுவ அடக்குமுறை நடந்தது. இதனால், சுமார் 7,40,000 மக்கள் அந்நாட்டிலிருந்து வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர். வங்கதேசத்தில் சுமார் 2 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள்.

அவர்கள், மிருகங்கள் போன்று தாங்கள் வாழ்ந்து வருவதாகவும், தங்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது என்றும் வேதனையுடன் கூறியிருக்கிறார்கள். எனவே அந்த மக்களை மீண்டும் மியான்மருக்கு அனுப்ப வங்கதேச அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. எனினும், மியான்மர் அரசு அவர்களை மீண்டும் ஏற்க மறுக்கிறது.

இந்நிலையில், வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையரான மிச்செல்லி பாசெலெட், ரோஹிங்கிய மக்கள் வாழும் பகுதிக்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு, வங்கதேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அப்போது ரோஹிங்கியா அகதிகள் மீண்டும் மியான்மருக்கு செல்ல ஐக்கிய நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கதேச பிரதமர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |