பானி புயல் அதி தீவிர புயலாக மாறியது என்றும், வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒடிசா, கடல் பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இது ஒடிசாவின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே வருகின்ற மே கரையை கடக்கும்.அப்போது காற்றின் வேகம் 175-185 கி.மீ இருக்கும். அதிகபட்சமாக 205 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலால் ஒடிசாவில் உள்ள 5 மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.