இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் பொதுசேவை பயன்பாட்டிற்கு மாற்ற கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவானது தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப் படும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பான்மையான மக்கள் மனதில் இருந்து வரும் சூழ்நிலையில், படிப்படியாக மத்திய அரசு ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக விதித்து வருகிறது. அந்த வகையில்,
வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்பாட்டு விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், அக்டோபர் 21ம் தேதி வரை வங்கிகள் பொது பயன்பாட்டு சேவையின் கீழ் இயக்கப்படும் என்றும், தொழில்சார் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்கு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்ட எந்த போராட்டத்திலும் ஈடுபட முடியாது என்றும், இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் , இந்த திட்டம் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி வரை நிலுவையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.