Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” முகக்கவசம் அணியாததால்….. வங்கி ஊழியர் கைது….!!

கடலூரில் முக கவசம் அணியாத வங்கி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கிகள் அனைத்தும் நேர கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றனர். காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படுகின்றன.

அதிலும் ஊழியர்கள் தங்களது வாடிக்கையாளர்களை சமூக விலகலை  கடைபிடிக்க செய்ய வேண்டும் என்றும், அவர்களும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே கடலூர் மாவட்ட ஆட்சியர்  அப்பகுதிகளில் உள்ள வங்கிகளில் சோதனை மேற்கொண்டார். அந்தவகையில்,

பொன்னாடம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றுக்குள் நுழைந்து சோதனையிட்ட அவர், வாடிக்கையாளர்கள் சமூக விலகலை கடை பிடிக்கிறார்களா? என்று பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அதே வங்கியில் எழுத்தராகப் பணியாற்றிய வெங்கடேசன் என்பவர் முக கவசம் அணியாமல் இருப்பதை கண்டு,

அவரிடம் சென்று ஏன் முக கவசம் அணிய வில்லை என்றும், அதற்கான அவசியம் குறித்தும் விளக்கியதோடு, அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து பொதுமக்களுக்கு நோய் பரப்பும் வகையில் செயல்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |