தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகவும், தவிர்க்க முடியாத சூழலில் பொதுமக்கள் வங்கிகளிடமிருந்தும், நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்கி வாழ்க்கையை சமாளித்து வந்தனர். கொரோனா பேரிடர் காலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, இந்த கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத இன்னலுக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில்தான் மத்திய – மாநில அரசுகள் மக்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ரிசர்வ் வங்கி மக்களிடம் கடனுக்கான வட்டி வசூலிக்க கூடாது என்று தெரிவித்திருந்தது தற்போது அதற்கான உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் பிறப்பித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடம் வசூலித்த ஆறுமாத கடனுக்கான வட்டிக்கு வட்டி தொகையை நவம்பர் 5 திருப்பிக் கொடுக்கும்படி வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரூபாய் 2 கோடி கடன் பெற்ற அனைவருக்கும் வட்டி தொகையை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.