Categories
உலக செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த திருடன் செய்த செயல்.. வங்கியை சுற்றி குவிந்த போலீஸ்..!!

ரஷ்யாவில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த மர்மநபர் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இருக்கும் சைபீரிய நகர் தியுமெனில் 5 மாடி கொண்ட கட்டிடத்தில் Sberbank என்ற பெரிய வங்கி முதல் தளத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் பயங்கரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு வங்கிக்குள் நுழைந்துள்ளார். அதன் பின்பு அங்கிருந்த இரண்டு பணியாளர்களை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதிகாரிகள் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அப்போது அந்த நபர்  பயங்கரமான ஆயுதங்களை பையில் வைத்திருப்பதாக கூறியதோடு, பணம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் அந்த அடுக்குமாடி கட்டத்திலிருந்து சுமார் 50 நபர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆயுதமேந்திய படையினர் அப்பகுதியில்  குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |