Categories
தேசிய செய்திகள்

“வங்கிகள் திவாலானால்”… முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி…!!

இந்தியாவில் சில வருடங்களாக வங்கிகள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதன் காரணத்தால் பல வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு, வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வங்கி சொத்து மற்றும் வர்த்தகத்தை மறு சீரமைப்பு போன்ற செயல்பாடுகளை செய்து வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு வங்கி திவால்  அல்லது வங்கி மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் வங்கியில் டெபாசிட் பணம் திரும்பப் பெற முடியாமல் போனாலும் தத்தம் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய்  இன்சூரன்ஸ் தொகை உடனடியாக கிடைக்கும் என்று அறிவித்தார்.

மத்திய அரசு தி டெபாசிட் இன்சுரன்ஸ் அண்ட் கிரடிட் கேரன்டி கார்ப்பரேஷன் சட்டம் 1961′ (DICGC சட்டம்) கீழ்  செய்யப்பட்டுள்ள புதிய மாற்றத்தின் படி வங்கிகள் திவாலாகும் பட்சத்தில் வாடிக்கையாளர் கணக்கில் இருக்கும் பணத்தில் 5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதில் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யும் பணத்திற்கு  வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும். சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு செய்தியாகவும் இது உள்ளது.

Categories

Tech |