Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பான் படத்திற்கு தடை…சுட்ட கதையா..?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

காப்பான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் கதைகளை எழுதி வருவதாகவும், 2014 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் சரவெடி என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதியதாகவும், காப்பான் படத்தில் இருப்பது போன்ற நதிநீர் இணைப்பு பங்கீடு தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைத்திருந்தாக கூறியிருந்தார்.

Image result for kappaan

மேலும் இக்கதை தொடர்பாக பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறியதாகவும், இந்த கதையை கேட்ட கே.வி.ஆனந்தன் இந்த படத்தை தான் எடுக்க விரும்புவதாகவும், அதில் தனக்கு வாய்ப்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படத்தில் எந்தவிதமான வாய்ப்பையும் வழங்காமல் என்னுடைய கதையை மாற்றங்கள் செய்து படத்தினுடைய தலைப்பை மாற்றி காப்பான் என்ற பெயரில் படத்தை இயக்கியுள்ளார்.

Image result for kappaan

மேலும் அவர் இந்த படம் வெளியிடுவது தனக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே என்னுடைய கதையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் படக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் படத்துக்கு இடைக்கால தடை விதிக்க கூடாது என வாதிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Categories

Tech |