Categories
மாநில செய்திகள்

டிக் டாக் ஷோ வழக்கில் குறும்பு வீடியோவிற்கு தடை…!!

டிக் டாக்  ஷோ வழக்கில் குறும்பு வீடியோ எடுப்பதற்கும் , வெளியிடுவதற்கும்  தடை விதித்து   உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிக் டாக் என்ற பிராங்க் ஷோ செயலியை தடைசெய்ய வேண்டும் என  மதுரை பகுதியை சேர்ந்த   வழக்கறிஞர் முத்துக்குமார் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கு உயநீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரணைக்கு வந்தது.

தொடர்புடைய படம்

இந்த விசாரணையில், டிக்-டாக் செயலியை தடைவிதிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென  நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும் பிராங்க் ஷோ போன்றவற்றால் தனி மனித சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற டிக்-டாக் ஷோக்களில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுப்பதற்கும் , வெளியிடுவதற்கும்  தடைவிதிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

 

Categories

Tech |